(Your QR Code will be generated automatically)
Generated QR code
ஃபிரேம் புதிது!
Scan me frame on a QR Code
Bubble frame with scan me text at the top of a QR Code
Bubble frame with scan me text at the bottom of a QR Code
Frame with video play button detail and scan me text at the bottom of a QR Code
Envelope frame with scan me text and a QR Code coming out of it
Scan me text under a QR Code with an arrow pointing to it
Scan me text under a QR Code with a black outline
Shopping bag frame with scan me text surrounding a QR Code
Banner frame with scan me text at the bottom of a QR Code
NewQR Code creation built into your applicationUse our API

இந்த அம்சங்களுக்கு பதிவு செய்யவும்.

QR குறியீட்டை உருவாக்குதல்

பல்வேறு செயல்பாடுகளைத் தேர்வுசெய்யவும்: ஊடாடும்ஃ பேஸ்புக் (Facebook) லைக் பட்டனில் இருந்து PDF வடிவத்திலுள்ள விலைப்பட்டியல் வரை எதையும் தேர்வு செய்யலாம். இந்த புதுமையான செயல்பாடுகள் பயனர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை குறியீட்டை ஸ்கேன் செய்ய ஊக்குவிக்கின்றன. அடுத்த கட்டத்தில், வண்ணங்கள் மற்றும் வடிவங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடுகளை தனிப்பயனாக்கலாம். உங்கள் நிறுவனத்தின் லோகோவைச் சேர்க்கலாம் அல்லது வெறுமனே எங்களின் தயாரிக்கப்பட்ட வடிவமைப்பு வார்ப்புருக்கள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

விளம்பர பிரச்சார செயல்திட்டத்தை கண்காணித்தல்

விளம்பர பிரச்சாரம் துவங்கிய பிறகு, நீங்கள் ஸ்கேன் புள்ளிவிவரங்களைத் தடமறியலாம் - எத்தனை முறை, எப்போது, எங்கே, எந்த சாதனங்கள் மூலம் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். எனவே செயல்திறனில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதை நீங்கள் உடனே கவனிக்க முடியும். எளிமையான புரிந்துணர்வு வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களின் வடிவத்தில் அனைத்து தகவல்களும் வழங்கப்படுகின்றன. மூலத்தரவு அட்டவணைகளோடு கூடிய புள்ளிவிவரங்களை PDF அல்லது சிஎஸ்வி CSV வடிவத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

மாறும் QR குறியீடுகள்

மாறும் QR குறியீடுகளால் உங்களிடம் முழுமையான நெகிழ்வுத்தன்மை உள்ளது, ஏனென்றால் உள்ளடக்கத்திற்கு சுட்டி காட்டும் குறுகிய URL மட்டும் குறியிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் குறியீடுகளை உருவாக்கவும் அச்சிடவும் அவசியம் இன்றி, சேமிக்கப்பட்ட இணைப்புகள் அல்லது கோப்புகளை மாற்றலாம். இது வளங்களைச் சேமித்து, விளம்பர பிரச்சாரத்தின் எந்த மாற்றங்களையும் முடிந்த வரை விரைவாகச் செய்ய உங்களுக்கு உதவும்.

உயர் தர அச்சு வடிவங்கள்

JPG, PNG, EPS மற்றும் SVG பிக்சல் மற்றும் வெக்டார் கோப்பு வடிவங்களில் குறியீடுகளை பதிவிறக்கலாம். அனைத்து கோப்புகளும் உயர் தெளிவுதிறன் உள்ளவை. எந்தவித அளவாக இருந்தாலும், எந்த வண்ணமாக இருந்தாலும், மற்றும் எந்த அச்சிடும் பொருளாக இருப்பினும், தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் QR குறியீடுகளை அச்சிடுவதற்கான சிறந்த விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.

கணக்கு பகிர்தல்

QR குறியீடு விளம்பரப் பிரச்சாரங்கள் கொண்டு நெகிழ்வான கணக்கு பகிர்வின் மூலமாக சிறந்த பயனுள்ள குழுப்பணியை உருவாக்குங்கள். சில விநாடிகளில் உங்கள் கணக்கைப் பகிர மற்ற பணியாளர்களை அழையுங்கள். பல பயனர்களை, நிர்வாகிகளாகவோ அல்லது புள்ளிவிவரங்கள் பார்க்கும் உரிமையுள்ளவர்களாகவோ நீங்கள் சேர்க்கலாம். இந்த விதமாக நீங்கள் உங்களின் விளம்பரப் பிரச்சார திட்டமிடலை மேற்கொண்டு, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை எளிதாக உருவாக்குங்கள்.

உங்களுக்குத் தேவையான போதெல்லாம் உதவியைப் பெறுங்கள்

உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் எங்கள் நட்புடன் உள்ள வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுங்கள். ஆலோசனை மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளைப் பெறுவதற்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடனான எங்களது இணைய ஆதரவு மையத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். QR குறியீடு சந்தைப்படுத்துதலில் நீங்கள் சிறப்பாக செயல்பட நாங்கள் உதவுகிறோம்.

30 விநாடிகளில் தொடங்கவும்

இப்போதே எல்லா அம்சங்களையும் முயற்சிக்கவும்

ஏற்கனவே தங்களின் QR குறியீடு சந்தைப்படுத்துதல் உரிமை கிடைத்த நிறுவனங்கள்

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

மிக நல்ல மென்பொருள் மற்றும் ஆலோசனை வழங்குதல்

சிறந்த மென்பொருளை வழங்கியதோடல்லாமல் கூடுதலாக, QR சூட் சிறந்த ஆலோசனைகளையும் வழங்குகிறது. அம்சங்களை விளக்கவும், குறியீடுகள் உருவாக்க உதவுவதற்கும் எப்போதும் நட்புடன் உள்ள ஊழியர் உறுப்பினர்கள் இருப்பார்கள்.


- Robert Aumer, Seal Systems AG

போட்டியை சமாளித்தல்

விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு QRCode-Generator.de-லிருந்து qrsuite-க்கு மாற நாங்கள் முடிவு செய்தோம். பயன்பாட்டு எளிமை மற்றும் தகவல் பின்தளம் ஆகியன எங்களுக்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தின. நமது ஜெனரேட்டரானது (உருவாக்கி) இப்பகுதிகளில் போட்டியாளர்களை விட பல படிகள் முன்னதாகவே இருக்கிறது, மற்றும் தனிநபர் சேவையானது அவர்களின் நேர்மறை பண்பை தூண்டுகிறது.


- Jan Albers, European Coastal Airlines

நீங்கள் QR குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

நான்கு எளிமையான உபாயங்கள் மூலம் 173% அதிக ஸ்கேன்கள் வரை பெறலாம்

1
உங்கள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும்

உங்கஉங்கள் குறியீடு அருகே "என்னை ஸ்கேன் செய்யவும்" போன்ற ஒரு குறுகிய செயல்பாட்டு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உங்கள் குறியீடுடன் ஊடாட பயனர்களை அழையுங்கள்.

2
கூடுதல் மதிப்பை தெரிவிக்கவும்

உங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி பலனடைகிறார்கள் என்தை விளக்கவும், உதாரணமாக,"10% தள்ளுபடி பெறுங்கள்" போன்ற ஒரு குறிப்பைச் சேர்ப்பதன் மூலம்.

3
உங்கள் QR குறியீட்டை வடிவமைக்கவும்

ஒரு லோகோவை உங்கள் குறியீட்டில் பதிவேற்றுவது உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்கும், உங்கள் கார்ப்பரேட் வடிவமைப்பை முக்கியமானதென்றி வலியுறுத்தும் மற்றும் உங்கள் இலக்கு குழுவை கவர்ந்திழுக்கும்.

4
எவ்வளவு பெரியதாக அச்சிடப்பட வேண்டும்

வேலை செய்யாத சிறந்த உள்ளடக்கத்துடனான ஒரு அற்புதமாக தோற்றமளிக்கும் குறியீட்டு கோட்டை விட மோசமானது எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 2 சென்டிமீட்டர் அகலத்துடன் அச்சிட்டு, அனைவரும், எந்த கருவி மற்றும் செயலியாலும் ஸ்கேன் செய்ய முடியும் என்பதை உறுதி செய்யவும்.

உங்கள் சொந்த லோகோவுடன் கூடிய QR குறியீடுகளை உருவாக்கவும்

5 நிமிடங்களுக்கும் குறைவான காலத்தில்

ஒரு வெற்றிகரமான QR குறியீடு விளம்பரப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம்

...உங்கள் QR குறியீடுகளை ஆய்வு செய்யவதே ஆகும்

QR குறியீடுகள் அளவிடத்தக்கவை - உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் குறியீடுகளை ஸ்கேன் செய்வது எத்தனை முறை,எங்கே,எப்போது என அறிய முடியும். பல்வேறு சந்தைப்படுத்தும் ஊடகங்களில் பல மாறும் QR குறியீடுகளை அச்சிட்டு, அவை உங்கள் இலக்கு பார்வையாளர்களை எவ்வாறு மிகவும் திறம்பட அடைந்துள்ளன என பார்க்கவும். மாறும் குறியீடுகள் உங்கள் பொது விளம்பர வெற்றிக்கான அளவீட்டு அறிக்கைகளை பெற ஒரு சிறந்த கருவியாகும்.

30 விநாடிகளில் தொடங்கவும்

இப்போதே எல்லா அம்சங்களையும் முயற்சிக்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் QR குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.

1
QR குறியீடு என்றால்என்ன?

ஒரு QR குறியீடு ஒரு இரட்டைப் பரிமாண பார்கோடு ஆகும், இதில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை பிக்சல் உருமாதிரி உள்ளது, இது சில நூறு எழுத்துகளுக்கு குறியாக்கத்தை அனுமதிக்கிறது. இன்றைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அவற்றை மிக வேகமாக உணர்ந்து அடையாளம் காண முடியும் - QR என்பது விரைவான பதிலைக் குறிக்கிறது என்பதால் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.

2
QR குறியீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

ஸ்மார்ட்போன்கள் பரவலாகப் பயன்படுத்தபடுவதால், QR குறியீடுகள், மொபைல் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக இந்த நாட்களில் பயன்படுத்தப்படுகின்றன. வலைத்தளங்கள், வீடியோக்கள், PDF கள், படத்தொகுப்புகள் போன்ற டிஜிட்டல் உள்ளடக்கங்களை சேர்க்க முடிவது அல்லது துண்டுப்பிரசுரங்கள்ஃ, சுவரொட்டிகள், பட்டியல்கள் மற்றும் வணிக அட்டைகள் போன்ற அச்சிடப்பட்ட ஊடங்களில் தொடர்பு விவரங்களை சேர்க்க முடிவது ஆகியவை மூலம் QR குறியீடுகளிலிருந்து சந்தைப்படுத்துபவர்கள் பயனடைகிறார்கள்.

3
நான் எப்படி ஒரு QR குறியீட்டை உருவாக்க முடியும்?

ஒரு QR கோட் ஜெனரேட்டர் மூலம் QR குறியீடானது சில விநாடிக்குள்ளாக, மூன்று எளிய படிகளில் உருவாக்கப்படுகிறது. முதலில், உங்கள் குறியீட்டின் செயல்பாட்டை தேர்வு செய்யவும். இரண்டாவதாக, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பும் உள்ளடக்கத்தை உள்ளிடவும் மற்றும் வண்ணங்களைச் சரிசெய்வதன் மூலம் தனித்துவமான தோற்றத்தை கொடுக்கவும், அதனுடன் ஒரு லோகோவை பதிவேற்றவும். அது முடிந்ததா? அப்படியானால் உங்கள் குறியீடு பதிவிறக்கம் செய்வதற்கு மற்றும் அச்சிடுவதற்கு தயாராக உள்ளது.

4
QR குறியீடுகளை தனிப்பயனாக்க முடியுமா?

ஆம். ஒரு உயர் பிழை சகிப்புத்தன்மை நிலை காரணமாக, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு QR குறியீடுகளை, அதன் தன்மைகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க முடியும். உதாரணமாக, நீங்கள் புதிய முண்ணனி மற்றும் பின்னணி நிறங்களை தேர்வு செய்யலாம், உங்கள் நிறுவனத்தின் லோகோவை குறியீடு நடுவில் வைக்கலாம், மூன்று தனித்துவமான மூலைப் புள்ளிகளின் வடிவமைப்பை மாற்றலாம். உங்கள் குறியீடு உண்மையில் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் QR குறியீடு உணர்கருவிகள் மூலம் நடைமுறையில் சோதனை செய்யப்பட்டு வேலை செய்வதை உறுதி செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5
நிலையான மற்றும் மாறும் QR குறியீடுகள் என்றால் என்ன?

ஏற்கனவே அச்சிடப்பட்டவையாக இருந்தாலும் கூட, மாறும் QR குறியீடுகளின் மூலம் அவைகளின் செயல்பாடுகளை மற்றும் இலக்கு முகவரிகளை திருத்த முடியும். ஸ்கேன் எண்ணிக்கைகள் மற்றும் இடங்களைப் பற்றிய புள்ளியியல் சேகரிப்புகளையும், குறியீடு அணுகப்பட்ட சரியான தேதி மற்றும் நேரத்தையும் பெற முடியும். மாறும் குறியீடுகள் அவற்றில் எழுதப்பட்டுள்ள ஒரு சிறு URL ஐப் பயன்படுத்துகின்றன. இது பயனர்களை உங்கள் இலக்கு முகவரிக்கு அனுப்புகிறது. நிலையான குறியீடுகள் இந்த அம்சங்களை வழங்கவில்லை, ஆனால் அவை எந்த குறுகிய URL இல்லாமலே உங்கள் உள்ளடக்கத்துடன் நேரடியாக இணைக்கின்றன.

6
QR குறியீடுகளின் ஸ்கேன் எண்ணிக்கையை எவ்வாறு அளக்கலாம்?

மாறும் QR குறியீடுகள் மூலம், ஸ்கேன்களின் அளவீடு அல்லது "கண்காணிப்பு" சாத்தியமாகிறது. அந்தந்த வழங்குநர்களின் சர்வர், அதனுடன் இணைக்கப்பட்ட முன்னோக்கி அனுப்பப்படும் URL தொடர்புடைய தரவை சேகரிக்கிறது. இந்த நிகழ் நேரத் தகவல் உங்களுக்கு நேரடியாக கணக்கில் கிடைக்கும்.

7
அச்சிடுவதற்கு முன்பு நான் என்ன செய்ய வேண்டும்?

அச்சிடுவதற்கு உயர் தெளிவுதிறனுள்ள கோப்பு வடிவங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். JPG மற்றும் PNG கோப்புகளை தவிர, EPS மற்றும் SVG போன்ற வெக்டார் வடிவமைப்புகளும் ஏற்றவை. பிந்தைய இரண்டும் பெரிய அளவு அச்சுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், எந்த தரம் இழப்புக்கள் இல்லாமல் பெரிதாக்கவும் முடியும். பாதுகாப்பு கருதி, எப்போதும் வெளியிடும் முன் ஒரு நடைமுறைச் சோதனையை செய்ய வேண்டும்.

8
QR குறியீடுகளை அச்சிடுவது தொடர்பாக வேறு என்னென்ன அம்சங்கள் முக்கியமானவை?

தொடர்புடைய கோப்பு வடிவம் தவிர, மேலும் சில அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். பொதுவாக, அச்சு அளவு குறியிடப்படும் எழுத்துகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அதிக உள்ளடக்கத்தை குறியிடப்பட்டிருந்தால், அதிகமான இடம் தேவைப்படுகிறது. தோராயமாக 2 x 2 செமீ அளவு என்பது பெரும்பாலும் சரியாக இருக்கிறது. சீரற்ற மேற்பரப்புகளை தவிர்க்கவும். துண்டு பிரசுரங்கள் மற்றும் ஃபிளையர்கள் மீதுள்ள சுருக்கங்கள், எதிர்மறையான வழியில் குறியீடுகளின் தெளிவை பாதிக்கும்.

9
QR குறியீடுகளை எவ்வாறு ஸ்கேன் செய்யலாம்?

QR குறியீடுகளை குறிநீக்கம் செய்ய அல்லது படித்தறிய ஒரு மொபைல் ஃபோன் அல்லது டேப்லெட் மற்றும் அந்த சாதனத்தில் நிறுவப்பட்ட ஒரு QR குறியீடு உணர்கருவி ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றும் தேவை இல்லை. இந்த QR குறியீடு படிப்பான்களை அனைத்து ஆப் ஸ்டோர்களிலிருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு, செயலியை துவக்கி கேமரா தானாகக் கண்டறிவதற்கு காத்திருக்கவும். விநாடிக்குள் குறியிடப்பட்ட உள்ளடக்கம் திரையில் திரையிடப்படுகிறது. பயன்பாட்டின் தரத்திற்கான முக்கியமாக, ஆப் ஸ்டோர்ஸில் சராசரியான மதிப்பீட்டு மதிப்பை நீங்கள் குறிப்பிடலாம்.

10
QR குறியீட்டை எவ்வாறு வெற்றிகரமாக பயன்படுத்தலாம்?

உங்கள் இலக்கு பார்வையாளராக உங்களை நீங்களே பாவித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் குறியீட்டை ஸ்கேன் செய்யலாமா என்று கேட்கவும். குறியீடு என்ன வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றி உற்சாகமாக இருக்கிறீர்களா? அதில் உள்ள தகவல் உங்களுக்கு மதிப்புள்ளதாக அல்லது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்களா? பயனர்கள் உங்கள் விளம்பரத்துடன் தொடர்புகொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள், அதற்குப் பதிலாக ஏதாவது எதிர்பார்க்கிறார்கள். ஒரு மொபைல் வலைத்தளத்தைப் பயன்படுத்தி அந்த காட்சி அளவில் உங்கள் உள்ளடக்கத்தை வெறுமனே முன்வைக்கலாம், மேலும் பயனர்கள் அதைக் கொண்டு செல்லவும் பயனர்களுக்கு வசதியாக இருக்கும். குறியீட்டுக்கு மதிப்பு சேர்க்க உள்ளடக்கத்தை வழங்கவும் மற்றும் உங்கள் குறியீடு பல்வேறு தனிப்பட்ட விருப்பங்களை அதில் பயன்படுத்துவதன் மூலம் மக்களை ஈர்க்க செய்யலாம். "இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து இன்னும் கூடுதலாகக் கண்டறியவும்" போன்ற ஒரு எளிய அழைப்பு சொற்றொடர் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குறியீட்டின் பின்னால் உள்ளதைப் பார்க்க இன்னும் பலரை ஊக்குவிக்கும்.

11
QR குறியீடுகளின் வரலாறு

1994 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் QR குறியீட்டின் நடைமுறை அம்சங்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டனர்: டொயோடாவின் சப்ளையர் டென்சோவின் ஜப்பானிய துணை நிறுவனமான டென்சோ வேவ், வாகன உற்பத்திக்கான லாஜிஸ்டிக் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக, வாகன பகுதிகளை எளிதில் அடையாளப்படுத்துவதற்காக அவற்றை உருவாக்கினார். தோன்றிய நாட்டில் QR குறியீடுகள் மிகவும் நன்றாக பயன்படுத்தப் பட்டு ஜப்பானிய குடிவரவு அலுவலகம் கூட தங்கள் குடியிருப்பு அனுமதிக்கு அவற்றை பயன்படுத்தியது. இதற்கிடையில், QR குறியீடுகள் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பாவிற்கு சென்று, சர்வதேச அளவில் இப்போது தரம் உயர்த்தப் பட்டுள்ளன. QR குறியீடுகளின் சாதகமானதாக அம்சம், அதன் மேற்பரப்பில் 30 சதவிகிதம் சேதமடைந்திருந்தாலும், அழுக்கு அல்லது வேறு வழிகளில் மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் தெளிவு மற்றும் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்.

12
QR குறியீடுகளின் பயன்பாட்டு சாத்தியங்கள்

சாத்தியமான பயன்பாடுகள் கிட்டத்தட்ட முடிவற்றவை. குறிப்பாக URL கள் குறியாக்கம் செய்யும் போது பல்வேறு உள்ளடக்கங்கள் சாத்தியமாகும். இதில் முகப்புப்பக்கங்கள், தயாரிப்பு தளங்கள், வீடியோக்கள், படத் தொகுப்புகள், கூப்பன் குறியீடுகள், போட்டிகள், தொடர்பு படிவங்கள் அல்லது ஆன்லைன் படிவங்கள், சமூக ஊடக தளங்கள் போன்ற பிற வகைகள் அடங்கும். பல வேறுபட்ட உள்ளடக்கங்களுக்கு ஏற்கெனவே தொடர்பில் இருந்த தொலைபேசியில் செயலி வேலை செய்ய இணைய இணைப்பு தேவையில்லை. அவையாவன: எ.கா. நாட்காட்டி நிகழ்வுகள், WiFi இணைப்புகள் அல்லது தனிப்பட்ட தொடர்புத் தகவலைக் கொண்டிருக்கும் விகார்டுகள் (vCards), (பின்னர் எளிதாக முகவரி புத்தகத்தில் சேர்க்க முடியும்.) QR குறியீடுகளை வலை பக்கங்கள், அச்சு விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது வேறு எந்த சமதள பரப்புகளிலும் வைக்கலாம்.

QR கோட் ஜெனரேட்டர் ப்ரோ ன் 14-நாள் சோதனை பதிப்பைப் பெறுங்கள்.

அனைத்து அம்சங்களையும் இலவசமாக மற்றும் பொறுப்பு இல்லாமல் சோதிக்கலாம்.